Enthan Navil " எந்தன் நாவில் புதுப்பாட்டு " by Jesintha - Tamil Christian Song

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)

அனுபல்லவி

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) --- எந்தன்

சரணங்கள்

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் --- ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் --- ஆனந்தம்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் --- ஆனந்தம்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் --- ஆனந்தம்

5. இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் --- ஆனந்தம்